திருவள்ளுவர் பெருமை 
 
 
பொய்யா மொழித் தந்த
தெய்வப்புலவரின்
பொன்னடிப்போற்றி
வணங்கி வாழ்த்துகிறேன்

சூரியனே உன் புகழ்ப்பாட
திக்குச்சி நான் முயன்றேனே
சமுத்திரமே உன் புகழ்ப்பாட
சிறுத்துளி நான்
கவிதை வடித்தேனே..

தமிழினத்தின் ஆதி குருவே
மானிடம் தலைத்திட

தன்னையே உரமாக்கிய
பெருநாவலரே

ஆயிறத்து முன்னூற்று முப்பது
குறற்பாவில்
பிரபஞ்சம் முழுவதும் அளந்தவறே

ஒற்றை வரியில்
தத்துவமும்
ஏழுச் சொல்லில்
ரகசியமும்
மனித இனத்துக்குத் தந்தவறே

சிறுத்துளிக்குள் ஒரு கடலாய்
ஒவ்வொரு வரியிலும்
அர்த்தங்கள் , கருத்துக்கள் , ஞானங்கள்
ஆழ்ந்த தத்துவங்கள் சொன்னவறே

ஆண்டி முதல் அரசன் வரை
போகி முதல் யோகி வரை
அனைவருக்கும் ஒருப் பாடம் சொல்லி

அன்பும் , பன்பும் , ஒற்றுமையும்
மனித குளத்தின் வேர்கள் - என்று
வாழ்ந்து செளித்திட மனித இனம்
பாடி பகன்ற பாவலரே

காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழன் பெருமை மனம் வீச
மண்ணில்த் தோன்றிய
ஞான விருற்சகமே !

தமிழினம் முற்றிலும் அழிந்தாலும்
அழியாத பெருமை பெற்றவரே
உலகம் சுற்றும் நாள் வரையில்
காற்றும் உன் புகழ்ப்பாடும்

வாழ்க தமிழ்
வழர்க தமிழ் மக்கள்
ஓங்குக திருவள்ளுவர் பெருமை
Category: 0 comments

0 comments:

Post a Comment