ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்- R.Parthiban's Kirukkalgal


parthiban's kirukkalgal kavithaigalகிறுக்கல்களில் இவை நான் ரசித்த சில கவிதைகள் மட்டுமே.முழுதாக படிக்க தயவுசெய்து கடைகளில் விலைக்கு வாங்கி படியுங்கள்.


Parthiban's Kirukkalgal-மிகவும் ரசித்த கவிதைகள்
 
என்னை நேசித்த
முதல்
கவிதை!!!
 
      


 “ நினைச்சா பொறையேறும்”
 நிஜமாயிருந்தா...

 நீ செத்திருக்கனுமே
இந் நேரம் 

நீ அழிக்க
காத்திருக்கிறது
ஈர மணலில்
என் பெயர்.
கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும்போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு...எப்போது...சந்திப்பது?
                   

                   

ருகிப்போகவே
விரும்புகிறேன்
சுடராய்
நீ இருக்க...!!!அழுதுகொண்டே
இருப்பேன்
   நீ
            அணைக்கும்வரை....!!!
விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்
கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
யிரோடு
 நான்
இருக்கிறேன்..!
யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக
கனவனாக..
ஏன் கடவுளாக
நான் மட்டுமே
உன் காதலாக...!!!


விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?


மெய் மறந்து

பொய் சொன்னாயா?
என்னை
காதலிக்கிறேன் என்று.
படைத்தல்
காத்தல்
அழித்தல்
கா..த...ல்..!!!

கண்னைத் திற
உலகம் தெரியும்

கண் மூடு
நான் தெரிவேன்.பார்த்தல் பேசுதல
அணைத்தல்,
சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல், நீடித்தல்
.....காதல்!

எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்துகொண்டிருக்கும்
உன்
 நினைவுத் தீ.!


 நம்
நினைவில்
நான்..!!!
என்னை கிறுக்கனாக்கிய
கிறுக்கியே....................................
................................................................................
................................................................................
புரியுதாடி?


                  நான் .
               . யானாலும்
                  நீ மட்டும் ,
                                         
கிழக்கில் விளக்காய்
நீ சிரிக்க

மேற்கில் இருட்டாய்
 நான் சிப்பேன்!அதெப்படி..
உள்ளில் இருக்கும் உனக்கு
உருவம் மட்டும்
தொலைவில்...!!!


அடியே..!!
’Total அம்னீசியா’ உனக்கு
‘Selective அம்னீசியா’ எனக்கு
நீ மட்டும்
நினைவில்.

என்ன எழவு விஞ்ஞானமோ?
என் Chest X-ray ல்
ன் Photo.
ரோஜா
மோதி
முள்ளுக்கு எலும்பு
முறிவு..!
காதல்
கல்யானத்தில் முடியாது

ஆமாம்,
என் காதல்
ன் கல்யாணத்தில் முடியாது.


நன்றி
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன்.

Category: 2 comments

கவிதை ! விளக்கம் !

"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சாப்பாடு தேடவே வாழ்ந்து - சாப்பிட்டு

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வெட்டிக் கதைப் பேசிக்கொண்டு

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
இல்லாததை நினைத்து வருந்தி

வாடப் பலசெயல்கள் செய்து - நரை
பிறருக்கு தீங்கிழைத்து

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
நரை வந்த கிழவனாகி

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
செத்துப் போகும்

வேடிக்கை மனிதரைப் போலே -நான்
உண்மை அறியா ! மனிதரைப் போலே

வீழ்வே னென்று நினைத்தாயோ
நானும் இந்த மாய வழையில்வீழ்வே
என்று நினைத்தாயோ

........................................
தேடிச் சோறு நிதந்தின்ரு-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ
........................................
-மாகவி பாரதி
Category: 0 comments

திருவள்ளுவர் பெருமை 
 
 
பொய்யா மொழித் தந்த
தெய்வப்புலவரின்
பொன்னடிப்போற்றி
வணங்கி வாழ்த்துகிறேன்

சூரியனே உன் புகழ்ப்பாட
திக்குச்சி நான் முயன்றேனே
சமுத்திரமே உன் புகழ்ப்பாட
சிறுத்துளி நான்
கவிதை வடித்தேனே..

தமிழினத்தின் ஆதி குருவே
மானிடம் தலைத்திட

தன்னையே உரமாக்கிய
பெருநாவலரே

ஆயிறத்து முன்னூற்று முப்பது
குறற்பாவில்
பிரபஞ்சம் முழுவதும் அளந்தவறே

ஒற்றை வரியில்
தத்துவமும்
ஏழுச் சொல்லில்
ரகசியமும்
மனித இனத்துக்குத் தந்தவறே

சிறுத்துளிக்குள் ஒரு கடலாய்
ஒவ்வொரு வரியிலும்
அர்த்தங்கள் , கருத்துக்கள் , ஞானங்கள்
ஆழ்ந்த தத்துவங்கள் சொன்னவறே

ஆண்டி முதல் அரசன் வரை
போகி முதல் யோகி வரை
அனைவருக்கும் ஒருப் பாடம் சொல்லி

அன்பும் , பன்பும் , ஒற்றுமையும்
மனித குளத்தின் வேர்கள் - என்று
வாழ்ந்து செளித்திட மனித இனம்
பாடி பகன்ற பாவலரே

காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழன் பெருமை மனம் வீச
மண்ணில்த் தோன்றிய
ஞான விருற்சகமே !

தமிழினம் முற்றிலும் அழிந்தாலும்
அழியாத பெருமை பெற்றவரே
உலகம் சுற்றும் நாள் வரையில்
காற்றும் உன் புகழ்ப்பாடும்

வாழ்க தமிழ்
வழர்க தமிழ் மக்கள்
ஓங்குக திருவள்ளுவர் பெருமை
Category: 0 comments