Anna University May/June 2014(2008 Regulation) Time table

you can download from here.....


Anna University May/June 2014(2008 Regulation) Time table
Click Here To download.

Category: 0 comments

எனது பிரிவு உபசார விழாவில் நான் எழுதி வாசித்த கவிதை...



எனது கல்லூரி பிரிவு உபசார விழாவில் நான் எழுதி
வாசித்த கவிதை...(இறுதி ஆண்டு மாணாவனாய் என்னை மாற்றிக் கொண்டு...)

இந்த கவிதை மேடை  என்னால் மறக்கமுடியாத நிகழ்வு......
---------------------------------------------------------------------------------------------------------------    அ.விக்னேஷ்



அன்று நாம் நினைத்திருக்க மாட்டோம்
கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில்
நமக்குள் இருந்த பயமும் தயக்கமும்,
இன்று, கடைசி நாள் பிரிவில்
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என.

அன்று யாரென்றே தெரியாமல்,
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை
அருகருகே அமர வைத்த காலம்,
இன்று இதோ ந்துவிட்டது, மனதால் நெருங்கி
பிரிய மனம் இல்லாதவர்களை
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட.

அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்த
நமது கல்லூரி பயணம், நம் மனங்களில்
விட்டுச் சென்றுள்ளது
பல பசுமையான நினைவுகளையும்
சில மறக்க முடியாத ரணங்களையும்.

சில குறும்பானகாரணங்களாலும்,
காரணமே இல்லாமலும்
நாம் வைத்த செல்ல பெயர்களால்
மறந்தே போனோம் பலநிஜ பெயர்களை.
இனி,யாருமில்லை அப்பெயர்களைச்
சொல்லி கொஞ்சலாகநம்மை அழைக்க‌.

பல நாட்கள் அவகாசம் இருந்தாலும்
கடைசி நாள் காலையில்,
முதல் இருக்கை மாணவிகளிடம் இருந்து
கடன் வாங்கி, அவசர அவசரமாய்
எழுதி முடித்து மதியத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்ட
ஒப்படைப்புகள் எல்லாம், சாம்பலாகின்றனஇன்றோடு.

காலையிலேயே திறக்கப்பட்டு இடைவேளைக்குள்
காலி செய்யப்பட்டுவிடும் நம் உணவு டப்பாக்கள்.
எனினும்,ஒரு போதும் நாம் உண்டதில்லை,
நம் வீட்டு உணவுகளை மட்டும்.

ஒவ்வொரு செமஸ்டர் எழுதும் போதும்
முடிவு செய்வோம்.அடுத்த செமெஸ்டருக்கு,
முதலில் இருந்தே படிக்க ஆரம்பிப்ப தென்று.
இதோ வந்து விட்டது கல்லூரியின் இறுதி நாள்.
படித்தும் முடித்து விட்டோம் ஒரு வழியாக...

கல்லூரியின் தயவால் வெற்றி பெற்ற காதல்கள்,
இடையில் முறிந்து போன சிலகாதல்கள்,
விடை தெரியமாலே போன காதல்கள்,
காதலின் பெயரில் நடந்த சிலலீலைகள்,
எனஎல்லாம் முடிகின்றன இன்றோடு.

இனி இருக்கப் போவதில்லை,
கடைசி இருக்கை அரட்டைகளும்,
வெள்ளிக்கிழமை பிரியாணிகளும்,
சில்லரைகளை மட்டும் வைத்துக்
கொண்டு கேண்டின் செல்வதும்,
தோழியின் தந்தை மரணத்திற்கு
நாம் எல்லோரும் அழுததும்,
கல்லூரிப் பேருந்து பயணங்களும்,
'கேக்' பூசிய பிறந்த நாட்களும்,
தேர்வுகளில் தோள் கொடுத்த நட்பும்,
பொய் காரணங்கள் கூறி எடுக்கப்பட்டவிடுப்புகளும்,
தேர்வு முடிவுகளுக்கான பயங்கலந்த காத்திருப்புகளும்
இன்னும் பட்டியலுக்குள் அடங்காத பலவும்….

இது நிரந்திர பிரிவில்லையே!’ ,
எப்படியும் எல்லோரும் தொடர்பில்
தானே இருக்கப் போகிறோம்,
என ஒருவரை ஒருவர் தேற்றினாலும்
தவிர்க்க முடியவில்லை
விழிகளின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீர்த் துளிகளை...

இன்று எங்களுக்கு
பிரிவு உபசார விழா
இது நாங்கள் கல்லூரியில்
கலந்து கொள்ளும் கடைசி விழா

இக்கால இயந்திர உலகத்தில்
இந்த இளைஞர் இஞங்கிகளுக்கு
இளங்கலை மட்டும் போதாது
முதுமையை மனதில் கொள்ளாமல்
முதுகலையையும் முடித்து விடுங்கள்.

பள்ளிப் பருவத்தில் இருந்து
பட்டப்படிப்பிற்கு
படையெடுத்து வந்தோம்
இனி பட்டமும் பெறுவோம்
படித்தவன் என்று
இனி நட்டமும் பெறுவோம்
நல்ல நண்பனை இன்று

எங்கள் மீது பாயும் கேள்விகளுக்கு
நங்கள் கேலி செய்யாமல்
பளிச்சென்று பதில் கூர
நாங்கள் பக்குவமும் அடைந்து விட்டோம்.

முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும்
நாங்கள் முயற்சி செய்தோம்
இன்றாவது வெளியில் சென்று
மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று
மூன்றாம் ஆண்டில் மூளை சொன்னது
விரைவில் நீ  விவாகரத்து வாங்கி
வீட்டிற்கு சென்று விடுவாய் என்று.

கல்லூரி காலத்தின்
கடைசி காலத்தை நினைத்து
எங்கள் கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்தவில்லை
உச்சிமுதல் பாதம் வரை
உடலே கண்ணீர் சிந்துகிறது
வியர்வையாக
இனி நாமும் காலாவதியான மாணவர்கள்தான்
கல்லூரி மாணவர்கள் என்ற நிலையிலிருந்து.

இனி இந்தக் கல்லூரியை
கடக்கும் போதெல்லாம்
 நாங்கள் பீறங்கி போல்
பீரிட்டு அழமாட்டோம்.
எங்கள் கண்களில்
கண்ணீர் அலைகள் மட்டுமே பாயும்
அதை தடுக்க அவ்வபோது
எங்கள் கைகளே அனைகட்டுகளாகும்.

அனைவரின் அன்பு ,
அரவணைத்த அன்பர்கள்,
ஒருதலை காதல் ,
ஒன்று சேராத காதல் ,
ஒவ்வொருவருடனும் மோதல்,
எதிர் பாரத சண்டைகள் ,
எப்போதும் விளையாட்டு ,
நண்பனின் சாப்பாடு ,
இனிமை தராத இன்ட்ரெனல்,
வரண்டாவில் ஓட்டபந்தயம் ,
வகுப்பரையில் வாய்த்தகராறு,
அடிக்கடி அடித்து கொள்ளுதல் ,
ஆக்ரோஷ சப்தமிடுதல் ,
நாற்காலி மீது நடனம் ,
உடனடி வெளிநடப்பு ,
உண்மையை மறைத்தல் ,
மறந்துவிட்ட மதிய உணவு,
திறக்கப்படாத புத்தகங்கள் ,
தினந்தோறும் கொண்டாடங்கள் ,
கலகலப்பான கடைசிபெஞ்சு ,
கவலை இல்லாத வாழ்க்கை ,
அனைத்தையும் அனுபவித்து ,
இளமையை இழந்து ,
முதுமைக்கு முற்றுபுள்ளி வைக்கும் போது
ஜன்னலுக்கு இமை திறந்து
இருக்கையில் அமர்ந்து இமைகளை மூடி
இதமான காற்றில் இனிமையான நிகழ்வுகளை
அமைதியாக அசை போடும் தருவாயில்
அடிக்கடி வந்து செல்லும்
இழந்துவிட்ட இளமை பருவமும்
கடந்து வந்து கல்லுரி காலமும்.

நம் நான்கு வருட காலம்!
நம் விடை பெற்று சென்றாலும்,
ஒவ்வொரு மேஜையும் கூறும்,
நாம்  தூங்கிய தூக்கத்தையும்,
கிறுக்கிய  கிறுக்கல்களையும்!

நம் டிபார்ட்மென்ட் வாயிலிலுள்ள
திண்டு,கதை கதையை சொல்லும்,
நம் தோழர்களின் மாலை அரட்டைகளையும்,
அவர்களின் சிறு சிறு சேட்டைகளையும்!
நம் செமினார் அரை நினைத்து கொண்டே இருக்கும்,
நாம் வைவாவில் விழித்து கொண்டிருந்ததையும்,
இன்போசிஸ் மூலம் ஆடிய ஆட்டங்களையும்!

ஒவ்வொரு கல்லும்
நம் கல்லூரி நட்பை நினைவு படுத்தும்!
காலங்கள் பல கடந்தாலும்,
உயிருடன் இருக்கும்,
நம் பசுமையான நட்பு!
இந்த டிபார்ட்மென்ட் இருக்கும்வரை!

அறியாமையால் செய்த இன்னல்கள் பல!
அறிந்தே செய்த சிக்கல்கள் பல!
எல்லா தருணமும் அன்று வலித்தாலும்,
இன்று இனிக்கிறது!
ஏதேனும்,
மனங்களை வருத்தினாலும்,
கண்களை கலங்க செய்தாலும்,
இதுவே தருணம்
மன்னிப்பு கேட்க அல்ல!
மனங்களை புரிந்து கொள்ள!
இந்த கல்லூரி குடும்பம் என்றும்
நல்லதொரு குடும்பமாய்
நட்புள்ளமுடன் இருக்கும்...
நம் கடைசி மூச்சு வரை அல்ல ....
நட்புறவின் மூச்சு நிற்கும் வரை...


இனிக்கின்ற நினைவுகளும் கனக்கின்ற நாளிது
உளம்வென்ற நட்பினையும் பிரிக்கின்ற நாளிது
ஒளிநின்றக் கண்களிலும் வியர்க்கின்ற நாளிது
பிரிவென்ற பெருந்துயரம் களம்வென்ற நாளிது

விடைபெறும் நேரம்
எதிர்நோக்கவில்லை நாமும்
படித்த பாடங்கள் கண்ணீரில் கரைந்து விட
பேசிய வார்த்தைகள் மனதிற்குள்ப் புதைந்து விட
சிரித்த சிரிப்பொலிகள் வகுப்பறையில் எதிரொலிக்க
இன்புற்றத் தருணங்கள் கண்மணிக்குள் புதைந்து விட
பிரிந்து செல்கின்றோம்
நினைவுகளின் வலிகளோடு.....

நட்பே!
நட்பின் ஆழத்தை
சந்தித்த நாம்
வாழ்கையின் ஆழத்தை
சந்திக்க
விடை பெறுகிறோம்.

கல்லூரி வாழ்வில்

அன்பை மையப்படுத்தி

நட்பை முன்னிலை படுத்தி

ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு

பிரிவு என்னும் பெரும் சோகம் !!

இன்பமான பயணம்

நின்று போவதால் அதிர்ச்சி !!

காலம் என்பது எங்களை

பிரிக்க வந்த எமன்

இப்பொழுது பிரிகிறோம் நாங்கள்

நம்பிக்கை உண்டு பாருங்கள்

மீண்டும் சிந்திப்போம்

நிச்சயம் ஒரு நாள் ..!!!
--
                                                   

                                                          ----அ.விக்னேஷ்