ரு பள்ளத்தாக்கு முழுவதும் 
பாய்விரித்த குறிஞ்சிப் பூக்கள்...!
 

மேகம் இல்லாத இரவு வானில்
புதியதாய் பூத்த மூன்றாம் பிறை...!
 

வால்பார்த்துபறந்து வானில் 
ஓவியம் வரையும் பறவைகள் கூட்டம்...!  

ச்சை பட்டாடை உடுத்தியமலையில்
பட்டுத்தெரித்து சிதறும் நீர்வீழ்ச்சி...!

ரே நாளில் பூத்த
அத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்


வைகள் ஈடுகொடுக்க முடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!

Category: 3 comments

தேடல்..!

எனது பயணங்கள்
உனது விழிகளில் தொடங்கியது..
இன்று..!
உன்னை நான் தொலைத்த
வேளையில்,என் வாழ்க்கையின்
தேடல் தொடங்கியது..
பள்ளியில் படித்த பாடத்தை விட
உன்னிடம்
காதல் பாடத்தை படித்ததே
அதிகம்.. இருந்தும்
காதல் என்னும் தேர்வில்
தோற்றது ஏனோ..?உன் கரம் கோர்கையில்
நினைவுகள் ஆயிரம்..
நினைத்தாலே இனிக்கும்
தருணம்..
இது சோகமானாலும்
என் வாழ்க்கையின் தேடலில்
நெஞ்சுக்குள் ஒரு சுகம்..
இதயம் பேசும் என்
தனிமையான இரவுகளுடன்
என் காதலை
யாசிக்கிறேன்..!
Category: 2 comments

அன்பு தாயே..
பத்து மாதம் என்னை
சுமந்து ஈன்றேடுதவள்..
முதல் முதலாக இந்த
மண்ணில் பிறந்து நான்
பார்த்த தேவதை நீ..
எத்தனை நாள் தவம்
கிடந்தேன் உன் முகம்
காண தாயே..!

உன்னால் நான் பிறந்தேன்
இந்த உலகத்தையும்
உன்னால் அறிந்தேன்..
கோடி தவம் நான்
செய்திருக்க வேண்டும்..
உன்னை போல ஒரு
தாயை பெற..!

உன் மடியில் தலை
வைத்து படுத்தல்,
துன்பம் வேகுதுரமாக
தெரியும்..என் கண்களில்
நீர் வழிந்தால் என்னுடன்
சேர்ந்து அவள் கண்களிலும்
கண்ணீர் சிந்தும்..

மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..ஏன் தெரியுமா?
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..

Category: 0 comments

என் காதலே..என் காதலே

http://4.bp.blogspot.com/_SexAjdPj3cE/SpSGdBGR2HI/AAAAAAAAAc8/yWyPA_LoQlY/s320/p1010524a.jpg
உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!

காதலினால் ஏற்பட்ட
காயங்களை அழிப்பதற்கு
கண்ணிரை செலவழிக்கிறேன்..
ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டாய்..
சிலுவைகலாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உயிரோடு
நான் இறந்து விட்டேன்...!

நான் இல்லாமல் நீ
இருப்பாய்..ஆனால்
நீ இல்லாமல் என்றும்
நான் இல்லையடி..!
Category: 0 comments

காவிய பெண்ணே..
 
புரிந்துக் கொள் என் 

காதலை ஒரு முறை..

உறவுகள் சொல்ல பலர் 

இருந்தாலும் என் உணர்வை

புரிந்துக் கொள்ள 

நீ மட்டுமே இன்று..!
Category: 0 comments


என்னுடனான உன் நினைவுகள் 

நீ என்னை வெறுக்கும் கணங்களில் தான் 
என் காதலும் அதிகமாக துளிர்விடுகிறது , 
பொய்யாக பழகும் உறவுகளைவிட 
உண்மையாய் நீ என்னை வெறுப்பதும் 
ஒரு வித சுகமாகத் தான் இருக்கிறது 
ஏனெனில் 
உன் நினைவுகள் என்னோடு 
இருப்பதனால்

பேசும்  தருணத்தில்  நான்  அடிக்கடி  உன்னிடம்  சொல்லுவேன் 
நீ  என்  செல்ல  குழந்தை  என்று 
பெண்ணே !
உன்  மழலையான  குறும்புகளின்  செய்கைகளை  பார்த்துதான்  
அப்படி  உன்னை  செல்லமாய்  கூப்பிடுவேன் 
குறும்பில்  மட்டும்தான்  குழந்தை  என்று  நினைத்தேன் !
குணத்திலும்  குழந்தையாகவே  மாறிவிட்டாய் ..
காதல்  என்பதை  கூட  
ஒரு  விளையாட்டாக  நினைத்துவிட்டாய் 
இப்போது  உன்னால்  வெறுக்கப்பட்டவன்  என்றாலும் 
அப்போது  உன்  மனதில்  அன்பாய்  புதைக்கபட்டவன் 
என்பதை  மறந்து  விடாதே !!

Category: 7 comments

CONFUSION(LOVE)


கர்த்தர் குழப்பத்தில் இருக்கிறார்.....!


 
முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
தொகுப்புதான் காதலோ....
 

ன்னை மறக்க நீயும்
உன்னை நினைக்க நானும்
ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....

ம்மில் யார் ஜெபத்தை ஆசீர்வதிப்பதென்று
திண்டாடிக் கொண்டிருக்கிறார்
கர்த்தர்...
Category: 0 comments