ஐந்தாண்டுத் திட்டங்கள்


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு

Author: Vignesh A


பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் - விஸ்வேஸ்வரய்யா

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு:

* பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் - விஸ்வேஸ்வரய்யா

* தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.

* 1934 - ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.

* 1944 - ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக  8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.

* 1945 - காந்திய திட்டம் - ஸ்ரீமன் நாராயணன்

* 1950 - மக்கள் திட்டம் - M.N. ராய்தேசிய திட்டக் குழு:

* தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் தொடங்கப்பட்டது.

* திட்டக் குழுவின் முதல் தலைவர் - ஜவஹர்லால் நேரு.

* திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் - குல்சாரிலால் நந்தா.

* திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

* திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.திட்டக் குழுவின் நோக்கம்:

* நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.

* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.

* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்

* விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.

* சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.தேசிய வளர்ச்சிக் குழு:

* தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.

* தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் - மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.

தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:

* ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்.மாநில திட்டக் குழு:

* மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில முதல்வர்.

* மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.

* ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 - 1956

முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்

முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.

சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.

வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:

தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 - 1961

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.

முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:

* ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.

* பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.

* ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.

* தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

* அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 - 1956

* மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.

* மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.

* பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்

* சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.ஆண்டுத் திட்டம்: 1966 - 1969

* இது திட்ட விடுமுறை காலமாகும்

* இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

* முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 - 1974

* நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.

* பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 - 1979

* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை
Category: 0 comments

Tnpsc Group 2A 2016 General English Answer key download

Category: 0 comments

Tnpsc Group 2A 2016 General Studies answer key

Category: 0 comments

Tnpsc Group 2A 2016 General Tamil answer key download

என் கல்லூரி விடுதி...

என் கல்லூரி விடுதி...

-- அந்த முதல் நாள்

நரகமென எண்ணி
விடுதியின் வாசலை
பல யோசனைகளுக்கு
பின்னர் மிதித்தேன்...

தகவல் பலகையில்
எனக்கான அறையை
பார்த்துவிட்டு....
பல எண்ணங்களுடன்
எனது அறையை அடைந்தேன்...

எனக்கு முன்
சிலர் வந்துவிட்டார்கள்
என்பதை
அழகாக காட்டிக் கொடுத்தது
செல்புகளில்
வைக்கப்படிருந்த
அவர்களின்
பெட்டிப் , படுக்கைகள்...

எனக்கென
இருந்த
செல்பில்
என்னுடைய பொருட்களையும்
வைத்துவிட்டு ...
சில அறிவுரைகளை
கூறியபடி, அப்பாவும்
"போய்ட்டு வரேண்டா"
என்றபடி
விடை பெற்றார்...

5 மணி நேரம் தான்
பயணம்,,
ஏன் "விடுதி" என்று
மனதில் எண்ணிக்கொண்டவாறே
அரைகுறை மனதுடன்
தலையசைத்தேன்...

இரவு 8 மணிக்கு
ஒவ்வொருவராக ...
அனைவரும்
வந்து சேர்ந்தார்கள்
என் அறைக்கு...

மொத்தம் 8 பேர்
யாரும் யாரிடமும்
பேசாமல்
அன்றைய இரவு
கழிந்தது...

மறுநாள்:-
உங்ககிட்ட பேஸ்ட் இருக்கா?
நான் மறந்துட்டேன்
என்றவாறே
ஒரு "நண்பன்" கேட்டான்..
நானும் என்னிடம்
உள்ளதை
எடுத்துக் கொடுத்து
தங்களைப் பற்றி
பகிர்ந்து கொண்டோம்...
அன்றைய இரவே
ஒவ்வொருவரும்
பழகிவிட்டோம்..

"நீங்க , வாங்க" தொடர்ந்தது..
ஒரு வாரம்
கழிந்த நிலையில்
நீங்க வாங்க "நீ , வா " என
மாறியது..

அப்புறம் என்ன
"மாமா , மச்சான் " தான்...
வெள்ளிக் கிழமை மாலை
லீவ் லெட்டரில்
சைன் வாங்கி விட்டதை
MLA சீட்
வாங்கி விட்டதை போல
சந்தோசப் பட்டுக்கொண்டு
புறப்படும் போது...
உலகையே
வாங்கி விட்டதாய் உணர்வோம்...
புது பேண்ட்,
புது சட்டை விகிதம்
பேக் முழுவதும்
அழுக்குத் துணிகளுடன்
ஊர் செல்லும் போதோ
ஒய்யார வரவேற்பு..

ஏய்.. எப்படா வந்த .. என்று...
வெள்ளிக் கிழமை இரவுக்கும்
திங்கள் கிழமை காலைக்கும்
அரை மணி நேரம் தானோ
என நினைக்கும் அளவுக்கு
சட்டென பறந்தோடும்
அந்த இரண்டு நாட்களும்...

மீண்டும் திங்கள் காலை
தேய்த்த துணி மணிகளுடனும்
தூக்க முடியாத அளவு
தின்பண்டங்களுடனும்
மீண்டும் விடுதி
நோக்கி பயணம்...

பலமுறை பார்த்த
படங்கள் - ஆயினும்
சலிக்காமல் பார்க்கத் தூண்டும்
சனிக்கிழமை இரவு...
ரஜினி,கமல்,அஜித்,விஜய்,
தனுஷ்,சிம்பு ,,, ஏன்
பவர் ஸ்டார் க்கும் கூட
ரசிகர்கள் இருப்பதை
சனிக்கிழமை இரவுதான்
எங்களுக்கு காட்டிக் கொடுக்கும்...

விடுதியின் சுற்றுச் சுவர்
பாளையங்கோட்டை
சிறைசாலையை
நியாபகப்படுத்தும்..
இங்கேயும்
வார்டன்கள் உண்டு...
ஆனால்..,,
கைதிகள் இல்லை...

சிறு தவறு செய்தால் கூட
"பாட்ஷா" படத்தை
நியாபகப் படுத்தும்
கொடிக் கம்பத்தில்
வைத்துதான் விசாரணை...

மெஸ் சாப்பாடுகளை
"குறையாக சொல்லும்"
சில நண்பர்கள் இருந்தாலும்
அதை "வெளுத்துக்கட்டி"
ஒரு ரவுண்டு விடும்
சில சாப்பாடு
ஜாம்பவான்களும் உண்டு...

படிப்பில் சிலர்
அரட்டைக்கு பலர்
படிப்பிற்கும் , அரட்டைக்கும் சிலர்
என ,,
பலவகையான
பறவைகளைக் கொண்ட
எங்கள் விடுதி...

ஒரு "மாணவச் சரணாலயம்"
அறை அறையாக வரும்
"தி ஹிந்து" ஆங்கில நாளிதழை
மடிப்புக் கலையாமலும்..
விடுதிக்கே ஒன்று
என வரும்
"தின தந்தி " நாளிதழை
மடிப்புகளாலும்
கலை இழக்கச் செய்வோம்...

சாப்பாடு போட்டி,
பாட்டுப் போட்டி.
விளையாட்டுப் போட்டி,
கலை நிகழ்சிகளுக்கும்
பஞ்சமில்லை எங்கள்
விடுதியில்...

நட்பை மட்டுமல்லாது
நல்லவற்றையெல்லாம்
கற்றுக்கொடுத்த
எனல் கல்லூரி விடுதி
என்றும் எங்களுக்கு
"ஆலயம்" தான்.....

இன்னும் தொடரும்...
காத்திருங்கள்
உங்கள் தோழன் விக்னேஷ்

Category: 0 comments

ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்- R.Parthiban's Kirukkalgal


parthiban's kirukkalgal kavithaigalகிறுக்கல்களில் இவை நான் ரசித்த சில கவிதைகள் மட்டுமே.முழுதாக படிக்க தயவுசெய்து கடைகளில் விலைக்கு வாங்கி படியுங்கள்.


Parthiban's Kirukkalgal-மிகவும் ரசித்த கவிதைகள்
 
என்னை நேசித்த
முதல்
கவிதை!!!
 
      


 “ நினைச்சா பொறையேறும்”
 நிஜமாயிருந்தா...

 நீ செத்திருக்கனுமே
இந் நேரம் 

நீ அழிக்க
காத்திருக்கிறது
ஈர மணலில்
என் பெயர்.
கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும்போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு...எப்போது...சந்திப்பது?
                   

                   

ருகிப்போகவே
விரும்புகிறேன்
சுடராய்
நீ இருக்க...!!!அழுதுகொண்டே
இருப்பேன்
   நீ
            அணைக்கும்வரை....!!!
விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்
கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
யிரோடு
 நான்
இருக்கிறேன்..!
யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக
கனவனாக..
ஏன் கடவுளாக
நான் மட்டுமே
உன் காதலாக...!!!


விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?


மெய் மறந்து

பொய் சொன்னாயா?
என்னை
காதலிக்கிறேன் என்று.
படைத்தல்
காத்தல்
அழித்தல்
கா..த...ல்..!!!

கண்னைத் திற
உலகம் தெரியும்

கண் மூடு
நான் தெரிவேன்.பார்த்தல் பேசுதல
அணைத்தல்,
சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல், நீடித்தல்
.....காதல்!

எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்துகொண்டிருக்கும்
உன்
 நினைவுத் தீ.!


 நம்
நினைவில்
நான்..!!!
என்னை கிறுக்கனாக்கிய
கிறுக்கியே....................................
................................................................................
................................................................................
புரியுதாடி?


                  நான் .
               . யானாலும்
                  நீ மட்டும் ,
                                         
கிழக்கில் விளக்காய்
நீ சிரிக்க

மேற்கில் இருட்டாய்
 நான் சிப்பேன்!அதெப்படி..
உள்ளில் இருக்கும் உனக்கு
உருவம் மட்டும்
தொலைவில்...!!!


அடியே..!!
’Total அம்னீசியா’ உனக்கு
‘Selective அம்னீசியா’ எனக்கு
நீ மட்டும்
நினைவில்.

என்ன எழவு விஞ்ஞானமோ?
என் Chest X-ray ல்
ன் Photo.
ரோஜா
மோதி
முள்ளுக்கு எலும்பு
முறிவு..!
காதல்
கல்யானத்தில் முடியாது

ஆமாம்,
என் காதல்
ன் கல்யாணத்தில் முடியாது.


நன்றி
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன்.

Category: 1 comments

கவிதை ! விளக்கம் !

"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சாப்பாடு தேடவே வாழ்ந்து - சாப்பிட்டு

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வெட்டிக் கதைப் பேசிக்கொண்டு

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
இல்லாததை நினைத்து வருந்தி

வாடப் பலசெயல்கள் செய்து - நரை
பிறருக்கு தீங்கிழைத்து

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
நரை வந்த கிழவனாகி

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
செத்துப் போகும்

வேடிக்கை மனிதரைப் போலே -நான்
உண்மை அறியா ! மனிதரைப் போலே

வீழ்வே னென்று நினைத்தாயோ
நானும் இந்த மாய வழையில்வீழ்வே
என்று நினைத்தாயோ

........................................
தேடிச் சோறு நிதந்தின்ரு-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ
........................................
-மாகவி பாரதி
Category: 0 comments