கவிதை ! விளக்கம் !

"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சாப்பாடு தேடவே வாழ்ந்து - சாப்பிட்டு

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வெட்டிக் கதைப் பேசிக்கொண்டு

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
இல்லாததை நினைத்து வருந்தி

வாடப் பலசெயல்கள் செய்து - நரை
பிறருக்கு தீங்கிழைத்து

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
நரை வந்த கிழவனாகி

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
செத்துப் போகும்

வேடிக்கை மனிதரைப் போலே -நான்
உண்மை அறியா ! மனிதரைப் போலே

வீழ்வே னென்று நினைத்தாயோ
நானும் இந்த மாய வழையில்வீழ்வே
என்று நினைத்தாயோ

........................................
தேடிச் சோறு நிதந்தின்ரு-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ
........................................
-மாகவி பாரதி
Category: 0 comments

0 comments:

Post a Comment