அன்பு தாயே..
பத்து மாதம் என்னை
சுமந்து ஈன்றேடுதவள்..
முதல் முதலாக இந்த
மண்ணில் பிறந்து நான்
பார்த்த தேவதை நீ..
எத்தனை நாள் தவம்
கிடந்தேன் உன் முகம்
காண தாயே..!

உன்னால் நான் பிறந்தேன்
இந்த உலகத்தையும்
உன்னால் அறிந்தேன்..
கோடி தவம் நான்
செய்திருக்க வேண்டும்..
உன்னை போல ஒரு
தாயை பெற..!

உன் மடியில் தலை
வைத்து படுத்தல்,
துன்பம் வேகுதுரமாக
தெரியும்..என் கண்களில்
நீர் வழிந்தால் என்னுடன்
சேர்ந்து அவள் கண்களிலும்
கண்ணீர் சிந்தும்..

மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..ஏன் தெரியுமா?
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..

Category: 0 comments

0 comments:

Post a Comment