என் கல்லூரி விடுதி...

என் கல்லூரி விடுதி...

-- அந்த முதல் நாள்

நரகமென எண்ணி
விடுதியின் வாசலை
பல யோசனைகளுக்கு
பின்னர் மிதித்தேன்...

தகவல் பலகையில்
எனக்கான அறையை
பார்த்துவிட்டு....
பல எண்ணங்களுடன்
எனது அறையை அடைந்தேன்...

எனக்கு முன்
சிலர் வந்துவிட்டார்கள்
என்பதை
அழகாக காட்டிக் கொடுத்தது
செல்புகளில்
வைக்கப்படிருந்த
அவர்களின்
பெட்டிப் , படுக்கைகள்...

எனக்கென
இருந்த
செல்பில்
என்னுடைய பொருட்களையும்
வைத்துவிட்டு ...
சில அறிவுரைகளை
கூறியபடி, அப்பாவும்
"போய்ட்டு வரேண்டா"
என்றபடி
விடை பெற்றார்...

5 மணி நேரம் தான்
பயணம்,,
ஏன் "விடுதி" என்று
மனதில் எண்ணிக்கொண்டவாறே
அரைகுறை மனதுடன்
தலையசைத்தேன்...

இரவு 8 மணிக்கு
ஒவ்வொருவராக ...
அனைவரும்
வந்து சேர்ந்தார்கள்
என் அறைக்கு...

மொத்தம் 8 பேர்
யாரும் யாரிடமும்
பேசாமல்
அன்றைய இரவு
கழிந்தது...

மறுநாள்:-
உங்ககிட்ட பேஸ்ட் இருக்கா?
நான் மறந்துட்டேன்
என்றவாறே
ஒரு "நண்பன்" கேட்டான்..
நானும் என்னிடம்
உள்ளதை
எடுத்துக் கொடுத்து
தங்களைப் பற்றி
பகிர்ந்து கொண்டோம்...
அன்றைய இரவே
ஒவ்வொருவரும்
பழகிவிட்டோம்..

"நீங்க , வாங்க" தொடர்ந்தது..
ஒரு வாரம்
கழிந்த நிலையில்
நீங்க வாங்க "நீ , வா " என
மாறியது..

அப்புறம் என்ன
"மாமா , மச்சான் " தான்...
வெள்ளிக் கிழமை மாலை
லீவ் லெட்டரில்
சைன் வாங்கி விட்டதை
MLA சீட்
வாங்கி விட்டதை போல
சந்தோசப் பட்டுக்கொண்டு
புறப்படும் போது...
உலகையே
வாங்கி விட்டதாய் உணர்வோம்...
புது பேண்ட்,
புது சட்டை விகிதம்
பேக் முழுவதும்
அழுக்குத் துணிகளுடன்
ஊர் செல்லும் போதோ
ஒய்யார வரவேற்பு..

ஏய்.. எப்படா வந்த .. என்று...
வெள்ளிக் கிழமை இரவுக்கும்
திங்கள் கிழமை காலைக்கும்
அரை மணி நேரம் தானோ
என நினைக்கும் அளவுக்கு
சட்டென பறந்தோடும்
அந்த இரண்டு நாட்களும்...

மீண்டும் திங்கள் காலை
தேய்த்த துணி மணிகளுடனும்
தூக்க முடியாத அளவு
தின்பண்டங்களுடனும்
மீண்டும் விடுதி
நோக்கி பயணம்...

பலமுறை பார்த்த
படங்கள் - ஆயினும்
சலிக்காமல் பார்க்கத் தூண்டும்
சனிக்கிழமை இரவு...
ரஜினி,கமல்,அஜித்,விஜய்,
தனுஷ்,சிம்பு ,,, ஏன்
பவர் ஸ்டார் க்கும் கூட
ரசிகர்கள் இருப்பதை
சனிக்கிழமை இரவுதான்
எங்களுக்கு காட்டிக் கொடுக்கும்...

விடுதியின் சுற்றுச் சுவர்
பாளையங்கோட்டை
சிறைசாலையை
நியாபகப்படுத்தும்..
இங்கேயும்
வார்டன்கள் உண்டு...
ஆனால்..,,
கைதிகள் இல்லை...

சிறு தவறு செய்தால் கூட
"பாட்ஷா" படத்தை
நியாபகப் படுத்தும்
கொடிக் கம்பத்தில்
வைத்துதான் விசாரணை...

மெஸ் சாப்பாடுகளை
"குறையாக சொல்லும்"
சில நண்பர்கள் இருந்தாலும்
அதை "வெளுத்துக்கட்டி"
ஒரு ரவுண்டு விடும்
சில சாப்பாடு
ஜாம்பவான்களும் உண்டு...

படிப்பில் சிலர்
அரட்டைக்கு பலர்
படிப்பிற்கும் , அரட்டைக்கும் சிலர்
என ,,
பலவகையான
பறவைகளைக் கொண்ட
எங்கள் விடுதி...

ஒரு "மாணவச் சரணாலயம்"
அறை அறையாக வரும்
"தி ஹிந்து" ஆங்கில நாளிதழை
மடிப்புக் கலையாமலும்..
விடுதிக்கே ஒன்று
என வரும்
"தின தந்தி " நாளிதழை
மடிப்புகளாலும்
கலை இழக்கச் செய்வோம்...

சாப்பாடு போட்டி,
பாட்டுப் போட்டி.
விளையாட்டுப் போட்டி,
கலை நிகழ்சிகளுக்கும்
பஞ்சமில்லை எங்கள்
விடுதியில்...

நட்பை மட்டுமல்லாது
நல்லவற்றையெல்லாம்
கற்றுக்கொடுத்த
எனல் கல்லூரி விடுதி
என்றும் எங்களுக்கு
"ஆலயம்" தான்.....

இன்னும் தொடரும்...
காத்திருங்கள்
உங்கள் தோழன் விக்னேஷ்

Category: 1 comments

1 comments:

Jai said...

Idhu varai vidudhiyin vasanai ariyadha naan Oru naalaavadhu viduthuyil thanga vendum endru aasai padugiren ippodhu

Post a Comment