படித்ததில் பிடித்தது


காதல் அல்ல


எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்
விக்னேஷ்காதல் விளையாட்டு


இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.


மௌனமாக பேசுகிறேன்..


கொஞ்சம் நேரம்
பேசுவாளா என்று
என் மனம் துடிக்கிறது
ஆனால்...
அவள் மௌனமாகவே
இருந்து என்னை
ஊமை ஆக்கி விட்டாள்
நானும் மௌனமாகவே
பேசுகிறேன் அவளுடன்...!


நான் விட்ட அம்பு


அவளின் இதயத்தை துளைக்க
எய்தேன் காதல் அம்பை
இலக்கில்லாமல் திரும்பி
வந்து தாக்கியது என் இதயத்தை
அதிர்ச்சியடைந்தேன் பின்
ஆனந்தமடைந்தேன் அவள்
இதயத்தை ஏற்கனவே
என்னிடம் தந்து விட்டால்
என்று அறிந்தபோது.


முரட்டுக் காதல்


என்னவளே என் கண்ணிமையை
வெட்டிவிட்டேன் உன் வருகையை
கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கு அது
தடையாய் இருப்பதால்!

Category: 0 comments

0 comments:

Post a Comment