அவள்
கண் சிமிட்டல்

அனிச்சையாய்
ஒரு கவிதை
அவளின்
கண் சிமிட்டல் 

காதல்

அவளை
சிறைபிடிக்க
நினைத்து...
நான் கைதியானேன்

நான் ரசித்த கவிதை

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே

சொல்லடி 

நீ வரும்போது....
வெட்கத்தை உடுத்திக்கொள்ளவா?
வெட்கம் வரும்போது...
உன்னை உடுத்திக்கொள்ளவா

என் வீட்டு கண்ணாடி

என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ

ஓவியம்
சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
உன் நிழல்

கனவில் என் வாழ்க்கை

பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

சரிங்க அடுத்து பாக்கலாம் 
வணக்கம் 
அ .விக்னேஷ் 

Category: 0 comments

0 comments:

Post a Comment