வேண்டாமே இந்த புகைப்பழக்கம்..!!! ( தயவுசெய்து முழுசா படிங்க)

வேண்டாமே இந்த புகைப்பழக்கம்..!!! ( தயவுசெய்து முழுசா படிங்க) 

**************************************************************************************************************************

உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக
புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர்.


தவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழில
ாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.

இதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள்.

பொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு புகைக்கு அடிமையாகும் பழக்கத்தின் வேர்களை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

முதன் முதலாக புகை பிடிக்கும்போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி.

பதின் வயதுகளில் திருட்டுத் தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.

மூளையில் பரவும் நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது.

இதனால் தான் முதன் முறையாக புகை பிடிக்கும்போது வரும் உணர்ச்சிகள் கலவையாக உள்ளன.

இந்த முதல் முயற்சி தரும் கிளர்ச்சியே பிற்காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு நாம் அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றன.


இந்த கிளர்ச்சி கிடைத்தால் மூளை மீண்டும் மீண்டும் அந்த கிளர்ச்சியை எதிர்நோக்க ஆரம்பித்து விடுகிறது. நமது செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் மூளையின் நேரடி கட்டளைகள் அந்த கிளர்ச்சி சுகத்தை மனக்கண்ணில் அடிக்கடி நிகழ்த்திக் காட்டி புகைக்கு அடிமையாக்கி விடுகிறது.

சிறு வயதில் குழந்தைகள் புகை பிடித்தலை விளையாட்டாகக் கூட முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்பதற்கான முக்கியமான காரணம் என இதைக் கொள்ளலாம்.

புகை பிடித்தல் தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே. சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம்.

இதில் உள்ள அதிர்ச்சி கலந்த உண்மை என்னவெனில் இவர்களில் யாருமே புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அல்ல என்பது தான்.
அதாவது நம்மைச் சுற்றி உலவும் சிகரெட் புகையினால் புகை பிடிக்காதவர்களும் கூட சிறிது சிறிதாக பாதிப்படைகிறார்கள்.

நாளடைவில் இவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடைய பெரிய நோய்கள் வந்து மரணமடையும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன.

புகை பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது.

இன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம்.

மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை.

ஊடகங்களின் மலினமான பிரச்சாரங்களை மீறி நமது சமூகத்தைக் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுதல் அவசியம்

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல்


by,


ungal nanban 


VIGNESH


(thanks to tirunelveli INFO)
Category: 0 comments

0 comments:

Post a Comment