MAALATHI(STORY)


ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்


அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்ததுஅதன் ஒலிநடுநிசியில் இடுகாட்டில் கேட்கும் நாயின் மரண ஓலமாகக் கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் மாலதிஅதுவரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தவ‌ள்,முகத்தை துப்பட்டாவினால் துடைத்து விட்டுஅழுத்தமாக ஒரு முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்இரண்டாவது முறையாக ஒலிக்கிறது,அப்பாவிடமிருந்து அழைப்பு.
 இனியும் எடுக்காமல் இருந்தால்இதற்கும் ஒரு பேச்சு வாங்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தவளாய் விருப்பமின்றி அலைபேசியை எடுத்துக் காதோடு அணைத்துக் கொண்டு "ஹலோஎன்றாள்.
"என்னஇருந்துகொண்டே எடுக்க மாட்டேன் என்கிறாயா?" அப்பா கோபமாகக் கத்தினார்."அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்பா.""இதோ பார்உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்உனக்கு 26 வயதுஇத்தனை வயதுக்குப் பெண் பிள்ளைகள் கல்யாணமாகாமல் இருக்கக் கூடாதுஉனக்கு மனதில் என்ன பேரழகி என்று நினைப்பாவருகிறவனையெல்லாம் வேண்டாம் என்பதற்குஇப்படியே போனால் உன்னைப் பெண் கேட்டு யாரும் வரப்போவதில்லைவயதான காலத்தில் எங்களுக்கு ஏன் பாரமாக இருக்கிறாய்?யாரையாவது காதலிக்கிறாயென்றால் சொல்லிவிடுஅவனுக்கே உன்னைக் கட்டி வைத்து விடுகிறோம்எப்படியோ போஎங்களுக்கு நீ மட்டும் வாரிசு இல்லைஉன் தம்பி இருக்கிறான்அவனுக்குப் பெண் பார்க்க வேண்டும்.இன்றைக்கு உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்கிளம்பி மாமா வீட்டுக்கு வா.வந்து உன் அழகான முகத்தைக் காட்டிவிட்டுப் போஎல்லாம் எங்கள் தலையெழுத்து."அலைபேசி முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டது.
மாலதிமெளனமாய் சுவற்றை வெறித்தாள்.
பெண் சுதந்திரம் என்பது பல சமயங்களில் குழப்பமானதெளிவாக அறுதியிட முடியாத ஒன்று என்று நினைக்கத் தோன்றுகிறதுபாமரனுக்கும் புரிய மறுக்கும் ஒன்றாக அது இருக்கிறதுஅப்படி ஆனது இந்த சமூக அமைப்பின் அவலம்.
மாலதி பொறியியல் பட்டம் பெற்றவள்அவள் பெற்றோருக்கு சொந்த ஊர் கடலூர்சென்னை வந்தால் மாமன் வீடுஅம்பத்தூரில் இருக்கிறதுஅங்குதான் தங்குவர்ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராககை நிறைய சம்பளத்தில்சென்னையில் திருமங்கலத்தை அடுத்த அம்பத்தூர் ஓ.டியில் தனியே தோழிகளுடன் தங்கி வேலையில் இருக்கும் பெண் மாலதிதனி மனித ஒழுக்கம் என்று ஒன்று உண்டு என்று நினைக்கும் வெகு சில இளைய தலைமுறைகளுள் அவளும் ஒருத்திமனதின் ஓட்டங்களை அப்படியே வெளிப்படுத்துவதான நடவடிக்கைகள் அவளுடையதுதமிழ் இலக்கியங்கள்,நாவல்கள்கவிதை எழுதுவதுகைவினைப் பொருட்கள்நடனம்கோயிலில் கதாகாலட்சேபம் இவற்றுக்கெல்லாம் நேரம் போனது போக பிறிதெதற்க்கும் நேரமில்லை என்பதுதான் அவள்.
பெண்ணுக்கு வேலை என்பதை இரண்டாவது பட்சமாக நினைக்கும் குடும்பம் அவளுடையதுஒரு மனிதன்தனது இளம் வயதில் தொடக்க நிலை ஊழியனாக ஒரு கம்பெனியில் சொற்ப வருமானத்தில் சேர்ந்துவயோதிகத்தில் அதே கம்பெனியில் அதே தொடக்க நிலை ஊழியனாக ஓய்வு பெற எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு அவளின் அப்பா ஓர் உதாரணம்கணவனுக்கு எவ்வகையிலும் குறைந்தவள் அல்ல மாலதியின் தாய் வள்ளிவெளி உலகம் தெரியும்முன்பே திருமணமாகிவீட்டிற்குள் வீரம் பேசும் நாராயணனுக்கு மனைவியாகிப்போனதில்வள்ளி தெரிந்துகொண்ட உலகம் என்பது நாராயணன் காட்டிய உலகம் மட்டுமேஇத்தனைக்கும் வள்ளி அந்தக் காலத்து பி..
உறவுகளை உருவாக்குவதும்பலப்படுத்துவதும் எது தெரியுமாஅன்பா?இல்லைஇல்லவே இல்லைபுரிதல்சரியான புரிதல் இல்லையெனில் அன்பு கூட புரியாதுஆணவமாகத் தோன்றும்திமிராகப் படும்எதையோ நினைத்து ஏமாந்து விட்டதாய் தோற்றம் தரும்கோபம் கொள்ள வைக்கும்இனியும் ஏமாறக்கூடாதென்று எச்சரிக்கை உணர்வு கொள்ள வைக்கும்நம்பிக்கை இழக்கும்நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்க வாய்ப்பில்லைஇந்த சூட்சுமம் வெகு பலருக்குப் புரிவதில்லைகாதல்கள் பொய்த்துப் போவதும்,திருமண வாழ்க்கை முறிந்து போவதும்சகோதரப் பாசம் குன்றிப் போவதும்,நட்பு முறிவதும் என எல்லாமும் புரிதல் தோல்வியடைவதைச் சார்ந்த நிகழ்வுகள்.
மாலதியின் சர்ரியலிஸ கவிதைகள்நாராயணனுக்கு கிறுக்குத்தனம்.அர்த்தமற்ற வார்த்தைக் கோர்வைமாலதியின் காதல் கவிதைகள்அவரைப் பொறுத்த மட்டில்ஒரு பெண்ணின் காம வெளிப்பாடுஒரு விதமான முகமூடி கிழிப்புஅவளின் சமூக அக்கறைஅவருக்கு வேண்டாத வேலைகாலைக் கட்டிக்கிடந்த குட்டி நாய்தன்னைப் பார்த்துக் குரைப்பது போலஅவருக்குத் தெரிந்து இலக்கியம் என்பது இரண்டே இரண்டுஒன்றுஐவரைக் கணவர்களாக்கிய ஒருத்தியின் கதைமற்றொன்றுபெண்டாட்டியை அடகு வைத்தவர்களின் கதைஇதைத் தாண்டியும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்பது அவரின் கருத்துஅவர் அகராதியில் புத்தகங்கள் என்பது பள்ளிக்கூடத்துடன் தொடர்புடைய ஒன்றுஅவ்வளவேஅவள்எழுத்தின் மூலம் வெளிப்படுத்தும் அவளின் நுட்பமான மன உணர்வுகளை அவர் படிக்க ஆர்வம் காட்டுவதே இல்லைஏனெனில் புரியவில்லைபுரியாதது அறியாமை,குறைகுறையுள்ளவனாகக் காட்டிக்கொள்ளுதல் பங்கம்தான் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம்பயத்தில் எழுவது ஆதிக்க உணர்வு.
எழுத்து வீண் வேலை என்பார்எழுதினாலோகேள்வி கேட்டாலோகருத்து சொன்னாலோ தன்னை மதிக்காத பெண் என்பார்தன்னை மதிக்காதவரை தானும் மதிக்க வேண்டியில்லை என்பார்மகளிடம் பணம் வாங்கி,பெண்டாட்டிக்கு நகை செய்வார்மாலதி அவருக்கு மகள் அல்லபோட்டிக்கு நிற்கும் இன்னொரு மனிதன்அவருக்குத் தோன்றியதையே யாரேனும் சொல்லிவிட்டால்அவரை மிகச்சரி என்பார்அவன் ஒன்றுமில்லாதவன் என்றாலும்அரசனென்பார்பிறிதெவரும்அரசனானாலும் ஆண்டி என்று விடுவார்பாராமுகம் காட்டுவார்வாய்ப்பூட்டு போட்டுக்கொள்வார்சமயம் கிடைத்தால்சேறு பூசவும் தயங்க மாட்டார்கேட்டால்உலகத்தைப் பார்த்துக் கற்றுக்கொள் என்று பேசுவார்.
வள்ளிக்கு நாராயணன்தான் வகுப்பறைஅவரை அன்றியும் அவள் வேறெதையும் படித்ததில்லைபார்த்ததில்லைகேட்டதில்லைஅவளைப் பொறுத்தமட்டில் அவர் காட்டிய உலகம்தான் கண்முன்னே இருக்கும் ஒரே ஒரு உலகம்வள்ளிக்கு மூத்தவள் என்கிற முறையில் மாலதியின் கேள்விகள் அச்சுறுத்துகிறதுப‌தில் தெரிய‌வில்லை அல்ல‌து விள‌க்க‌இய‌ல‌வில்லை.விளக்கிப் ப‌ழ‌கியிருக்க‌வில்லைபதில்களைத் தேடி பழக்கமில்லைதன் மரியாதை கெட்டுவிடுமோ என்ற பயம்மாலதியை வள்ளியும் மட்டுப்படுத்தியிருக்கிறாள்சமாளிக்கும் விதமாக‌எழுத்தெல்லாம் வீண் என்று பலவீனப்படுத்தியிருக்கிறாள்அப்பா சொல்படி கேள் என்பதாய் அறிவுறுத்தியிருக்கிறாள்ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் செய்யும் அநீதி.ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஆணைச் சார்ந்து இருக்கச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறாள்.
இல்லைஇதுமுழுமையும் ஆதிக்க மனோபாவம் இல்லை.நியாய‌மான‌ப‌தில்க‌ள் இல்லாத‌இட‌த்துப் பலவீனம் தோன்றுகிறதுபயம் வருகிறதுஆதிக்க‌த்தின் கைக‌ள் ஓங்குகிற‌துநியாய‌மான‌ப‌தில்க‌ள் இல்லை.ஏனெனில்ச‌ரியான‌புரித‌ல் இல்லைசமூகம் இப்படித்தான் இருக்கிறது.இப்படித்தான் பழக்கப்படுகிறதுஇப்படித்தான் இதுஇதுவாஅதுவாஎன்று அறுதியிடப்பட முடியாமல் இருக்கிறதுசாக்ரடீஸை என்ன செய்தார்கள்?காந்தியை என்ன செய்தார்கள்கேள்வி கேட்பதில்லைசிந்திப்பதில்லைசரி,தவறுகளை அறுதியிடநின்று நிதானிக்க எவருக்கும் பொறுமையில்லை.காரியமாக வேண்டும்அதற்கு மூர்க்கம் உடனடியாகப் பயன்படும்இது ஒன்றுதான் அதற்குத் தெரியும்மாலதிக்குப் பெண் சுதந்திரம் தரப்படவில்லையெனில்தராதது யார்இன்னொரு பெண்ணும்தானே?
மாலதிதன்னைப் பற்றியும்தனக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் தெளிவாக அறிந்தவள்அவளுக்கும் பயம்வரப்போகிறவனும் இன்னொரு நாராயணனாக இருக்கக்கூடாதென்கிற‌ப‌ய‌ம்அவனுக்கு சர்ரியலிஸம் புரியவேண்டாம்குறைந்தபட்சம்சர்ரியலிஸம் பற்றிச் சொன்னால் கேட்டுக்கொள்பவனாககற்பூரம் போல் அதை உள்வாங்கிக்கொள்பவனாக,புத்தகங்களை நேசிப்பவனாகவாசிக்கும் ஆர்வம் வாய்ந்தவனாக இருப்பானா?தன்னை விட குள்ளமாய் இருந்து ஊரார் கேலிக்கு ஆளாகிவிடாமல்உயரமாய் இருப்பானாதேநீருக்குக் கூட தன்னை எதிர்பார்க்காமல் இருப்பானா?இரவுகளில் கொட்டாவி விட்டு அறையை விட்டுத் துறத்தாமல் இருப்பானா?வார இறுதிகளில் நடு ஹாலில் குடித்துவிட்டு வாந்தி எடுத்து நாறடிக்காமல் இருப்பானாஅப்பாவைப் போல் பணத்திற்குத் தன்னையே அண்டியில்லாமல் சுயத்துடன் இருப்பானா குவாண்டம் பிஸிக்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டாம்.குறைந்தபட்சம்தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவனாகவாவது இருப்பானாதொழில்நுட்பம் பற்றி தெரிந்திருக்கவில்லையெனினும்,சொன்னால் ஆர்வமுடன் கேட்டுக்கொள்வானாஎன்றாவது தானும் வீட்டில்,புருஷன் சம்பாதிக்கும் பணத்தில்சொகுசாய் நாவல் வாசிக்க இயலுமாஎன்றெல்லாம் அஞ்சுகிறாள் மாலதிஅவள் பயத்திற்குக் காரணம், 25வருடங்களை கூடவே பயணித்த பெற்றோரிடம் இல்லாத இந்தக் குணங்கள்.இவைகளை வரவழைத்துக்கொள்ளத் துணியாத அவர்களின் நிலைப்பாடு.அப்பேர்ப்பட்ட மனிதர்களுடனான மனச்சிக்கல்கள்குழ‌ந்தைப் பிராய‌த்திலிருந்தே அப்பாத‌ம்பிநண்பன்மாமன் என‌எல்லா கால‌க‌ட்ட‌த்திலும் ஏதோவொரு ஆணுக்கு அடிப‌ணிந்தே கிட‌ந்து இனி மிச்ச‌முள்ள‌கால‌மும் அப்ப‌டியே க‌ழிந்துவிடுமோ என்கிற‌ப‌ய‌ம்.
மாலதிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்எப்படிப் பார்க்கவேண்டும்ஆசையாய் வளர்த்தபொறியியல் படித்தசொந்தக்காலில் நிற்கத் தெரிந்தஞானம் அடைந்த‌பெண்ணுக்கு மாப்பிள்ளை எப்படி பார்க்கவேண்டும்மாலதியைத் தெரியவில்லைஅவள் எழுத்து புரியவில்லைஅதனால் அவளையே புரியவில்லைஅவள் என்ன என்பது புரிந்தால்தானே அதன் இணையைப் பற்றி தீர்மானிக்க இயலும்நாராய‌ண‌னுக்கும்வ‌ள்ளிக்கும் மால‌தி என்றொரு முக‌மூடியைத்தான் தெரியும்அந்த முகமூடி கூட அவர்களாக அவளுக்கு அணிவித்தது'உங்கள் பையனுக்கு எங்கள் பெண் பொருத்தம் என்று எண்ணுகிறோம்.. மேற்கொண்டு பேசலாமா?' என்பது இரைஞ்சுதல்.அவர்களுக்கு மண்ணைக் கவ்வும் செயல்மாலதி புரியவில்லைஅவள் தேவைகள் புரியவில்லைஅதைப் புரிந்துகொள்ளும் முயற்சி இல்லை.ஆனாலும் திருமணம் செய்யவேண்டும்கால‌ம் க‌டந்துவிட‌க்கூடாது என்கிற‌நிர்ப்ப‌ந்த‌ம் விர‌ட்டுகிற‌துபெண் கேட்டு வருகிறவர்களுக்குத் தந்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.
****************************************************மாலதிகுளியலறையை அண்டி முகம் கழுவி துடைத்துதுப்பட்டா சரிசெய்து,மின்விசிறிமின்விளக்குகள் அணைத்துஅறைக் கதவுகளைத் தாழிட்டு,ஸ்கூட்டியை உதைத்துக் கிளப்பி பத்து கிலோ மீட்டர் பயணித்து அம்பத்தூரிலிருந்து புதூர் செல்லும் வழியில் உள்ள சேது பாஸ்கரா பள்ளிக்கருகில் உள்ள அபார்ட்மென்டின் இரண்டாவது தளத்தில் இருக்கும் மாமா வீட்டிற்கு வர மாலை 4 மணி ஆனதுஅப்பா நாராயணன் ஸ்கூட்டி சப்தம் கேட்டு படியேறிவந்த மாலதியை வாசலில் எதிர்கொண்டார்.
"வா மாலதிஅவர்கள் வீட்டில் மாலை ஐந்து மணிக்கு வருவதாக்க் சொல்லியிருக்கிறார்கள்நீ சீக்கிரம் ஒரு புடவை அணிந்து கொள்.தயாராகிவிடுஎன்ன?" என்று விட்டு மாலதியின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல்,மனைவியிடம் திரும்பினார்."வள்ளிமாலதியைத் தயார் செய்துவிடுஇனிப்பு காரமெல்லாம் வாங்கியாகிவிட்டதுஅவர்கள் வர வேண்டியதுதான்மாலதியை பெண் பார்க்க வேண்டியதுதான்அதிகபட்சம் ஐந்து பேரை எதிர்பார்க்கலாம்அவர்களுக்குத் தேநீர் தயார் செய்து வைஎன்ன?"
"சரிங்கஎன்றுவிட்டு மாலதியை அழைத்துப் போனாள் வள்ளிமாலதியை உடைமாற்றச் சொல்லிவிட்டு சமையலறைக்குள் மால‌தியின் அத்தையுட‌ன் ஒண்டிக்கொண்டாள்.
ப‌ல‌வ‌ந்த‌ப்ப‌டுத்துத‌ல் என்பது ஒரு திணிப்புஅறியாமைஇங்கே மாலதியின் உள்ளக்குறிப்புபெற்றவர்களுக்குப் புரியவில்லைபுரியாத‌போது,க‌வ‌லைப்ப‌ட‌ஏதுமில்லைஎதிராளி ஒத்துழைக்க‌ம‌றுக்கையில் காரிய‌ம் சாதிக்க பிரயோகிக்கப் படுகிறது ப‌ல‌வ‌ந்த‌ம்வ‌ள‌ர்க்கும் நாய் சொன்ன‌தைக் கேட்காவிடில் விழுகிற‌து அடிப‌ல‌வ‌ந்த‌ம்குழ‌ந்தை அட‌ம் பிடிக்கையில் விழுகிற‌து அடிப‌ல‌வ‌ந்த‌ம்தேர்வுக்குப் ப‌டிக்காத‌போது விழுகிற‌து அடி.ப‌ல‌வ‌ந்த‌ம்புரியாத‌த‌ன்மையின் விளைவுகுழ‌ந்தை ஏன் அட‌ம் பிடிக்கிற‌து?அத‌ற்குப் ப‌ழ‌க்க‌மில்லைமிர‌ள்கிற‌துமுத‌ல் முறை ப‌ழ‌க்க‌ப்ப‌டுதல் அவசியம்.அதைச் செய்ய‌நிர்ப்ப‌ந்திக்க‌ப்ப‌டுகிற‌துதேர்வுக்குப் ப‌டிக்காத‌து க‌வ‌ன‌ச்சிதைவு அல்லது விருப்பமின்மைஆனால்தேர்வு இன்றியமையாததுஅதன் முக்கியத்துவம் பெற்றவனுக்குத் தெரியும்அது பிள்ளைக்கும் தெரிய‌வேண்டும்ஆர்வம் மேலிட புரியும்படி பாடம் சொல்லித்தரத் தெரியவில்லைவிளைவுபலவந்தம்.
மாலதிரவிக்கை அணிந்துபுடவை கட்டிகழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயினும்இரு கைகளிலும் தலா ஒரு மோதிரமும்வளையல்களும் அணிந்து தயாராகையில் மணி நான்கரை ஆகியிருந்தது'மாப்பிள்ளைப் பையனைப் பிடித்திருக்கிறதா?' என்று ஒருவரும் கேட்கவில்லைஅருகிலிருந்தால் பேச நேர்ந்துவிடுமோ என்று ஆளுக்கொரு பக்கம் ஒளிந்தது போலிருந்ததுதனித்து விடப்பட்ட மாலதிக்கு அழுகை வரும் போல இருந்ததுமீண்டும் பயம் வந்தது.உண்மை இருக்கும் இடத்து தெளிவு இருக்கும்தைரியம் வரும்துணிவு வரும்தன்னம்பிக்கை இருக்கும்ஓடி ஒளியத் தோன்றாதுபொய் இருக்கும் இடத்தில் தெளிவு இருக்காதுதெளிவு இல்லையேல் தன்னம்பிக்கை இருக்காது.ஓடி ஒளிய வேண்டி இருக்கும்இப்படியான செய்கைகள் பெற்றோரிடமிருந்தே ஒரு பெண்ணுக்கு நிகழ்வது என்பது ஒரு உச்சகட்ட நம்பிக்கைத் துரோகம்.பெற்ற தாய்ஒரு பெண்ணுக்கு முதுகெலும்புதாயை ஒட்டியே வளர்கிறாள் மகள்தாய் ஒரு தோழி போலதந்தைஆண் வர்க்கத்தின் முதல் பிரதிநிதி.முன்னுதாரண ஆண்ஆனால்அவர்களே புறமுதுகு காட்டுகையில் தனித்து விடப்படுகிறாள் பெண்நிராதரவாக உணர்கிறாள்மனதளவில் உடைகிறாள்.பலவீனமடைகிறாள்பற்றிக்கொள்ள கழுகொம்பு தேடுகிறாள்அந்த சமயம்,யாரேனும் ஆதரவுக்கரம் நீட்டினால்பேதையென‌தன்னை இழக்கிறாள்.
மாலதிக்கு விருப்பமின்மை.
புகைப்படத்தில் பெண் பார்க்க இருக்கும் பையன்ஒரு டீசர்ட்டும்சாதாரண ஜீன்ஸும் அணிந்திருந்தவாறு இருந்தான்அது தவறாதவறில்லை.ஐந்திலக்க ஊதியம் வாங்குபவனுக்குரசனையாய் உடை உடுத்தத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம்ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கும் உடைகள் ஆறே மாதத்தில் நைந்து போகும்ஆயிரத்து ஐந்நூறு லெவி ஸ்ட்ராஸ் என்றாலும் வருடக்கணக்கில் நிற்கும்நிறம் அள்ளிக்கொண்டு போகும்.உடுத்தினால் மதிப்பாய் இருக்கும்.அதைத் தேர்ந்தெடுக்க‌உடை உடுத்துவதில் சாதுர்யத்துடன் கூடிய ரசனை வேண்டும்வயது 27 என்றார்கள்ஆனால்,தோற்றம் 35 என மதிக்கச் செய்ததுஐந்தரை அடியில் நிமிர்ந்து நின்றால் கணுக்கால் தெரியாத அளவில் தொப்பைதொப்பை இருந்தால் மோசமானவன் என்றா பொருள்இல்லைஆனால்வளர்ந்து வரும் சூழலில்தேகப்பயிற்சி நோயையும் விரட்டும்உடலையும் கட்டுக்கோப்பாய் வைக்கும்தேவை,நேரத்துக்குப் பயிற்சிக்கூடத்தில் மெனக்கெடுதல்அது கூட இல்லையெனில்,சோம்பேறியாக இருப்பானோ என்று நினைக்கத் தோன்றியதுவங்கிக் கடனில் சுலபப்படும் பொறியியல் இன்றைக்குத் தனக்கே சாத்தியப்பட்டுவிட்டதில் தன்னை ஆள வேண்டிய கணவன் என்கிற ஆண்மகனுக்குத் தன்னை விட அதிகமான திறமைகள் இருக்கவேண்டும் என்று ஒரு பெண் எதிர்பார்ப்பதில் என்ன தவறுமேலும்இது எல்லாமுமே கொஞ்சம் மெனக்கெட்டால் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதானேஅப்படியொன்று இயலாத காரியமல்லவே.
ஆனால்அது அவளின் பெற்றோருக்குப் புரியவில்லைஏன் புரியவில்லை?ஏனெனில் தலைமுறை இடைவெளிஅவர்களால் பிள்ளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததற்குபுரியாத‌தொழில் நுட்பமும் ஒரு காரணம்2012 ம் வருடத்தில் 1935ன் மனப்பக்குவ‌ம் எப்படி போதும்அவர்களைப் பொறுத்தமட்டில்பெற்ற பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை செய்ய வேண்டும்காரியம் ஆக வேண்டும்.
'தான் ஏன் பழக்கமில்லாத ஒருவரைப் பற்றி இத்தனை தவறாக நினைக்கிறோம்,ஏன் சேற்றை வாரி இறைக்கிறோம்இது சரியா அல்லது தவறாகுறை தன் மீதாஅல்லது அவன் மீதா?,தனக்குள் முளைத்த இந்தக் கேள்விகள் ஏன் மற்றவர்களுக்குத் தோன்றவில்லைஉலகில் எல்லா பெண்களுக்கும் இதுதான் கதியாஇல்லைதனக்கு மட்டும்தான் இதெல்லாம் நிகழ்கிறதா?' மால‌தியின் பேதை ம‌ன‌ம் நிலைகொள்ளாம‌ல் த‌வித்த‌துநடப்பது நடக்கட்டும்இனி தடுக்க இயலாதுயார் கண்டதுவருகிறவர்களுக்குத் தன்னைப் பிடிக்காமல் கூட போகலாம்எப்படியாகினும்வந்தவர்கள் வந்த காரியம் முடித்துவிட்டுச் சென்றபின் அப்பாஅம்மாவிடம் பேசிக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டாள்.மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
நேரம் செல்லச் செல்ல ஒரு தீர்மானமான அவசரம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது போலிருந்ததுநாராயணனும் வள்ளியும் பார்க்கும்படி உடுத்திக் கொண்டார்க‌ள்வீட்டை ஒதுங்க வைக்கத் துவங்கியிருந்தார்கள்.வருகிறவர்களை எங்கெங்கு அமரவைக்கலாமென்று தங்களுக்குள் விவாதித்து இருக்கைகளை இடம்மாற்றிக் கொண்டிருந்தார்கள்வள்ளி மறக்காமல்,பூஜையறையை அண்டிகுங்குமச் சிமிழில் குங்குமம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்அணைந்திருந்த ஒன்றிரண்டு மின்விளக்குகளையும் ஒளியூட்டி வீட்டைப் பிரகாசிக்க வைத்தார்கள்சமையலறையில் தேநீரும்,குளிர்பானங்களும் தயாராக இருந்தனஐந்து அலங்காரத் தட்டுகளில் இனிப்பும்,காரமும் பகிரப்பட்டுத் தயார் நிலையில் இருந்தனமாலதியை யாரும் கவனித்தது போல் தோன்றவில்லை.
திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் மின்சார வினியோகம் த‌டைப்ப‌ட்ட‌து.மின் விள‌க்குக‌ள் அணைந்த‌ன‌மின்விசிறி ஜீவ‌னின்றி சோர்ந்த‌து.
"அய்யய்யோபோச்சு!!" நாராயணன் அலறினார்."நான் அப்போதே சொன்னேன்காலையிலேயே வரச்சொல்லிவிடலாமென்று.இப்போது பாருங்கள்சலித்துக்கொண்டாள் வள்ளி.மாமா அக்கம்பக்கம் விசாரிக்க விரைந்தார்விசாரித்துவிட்டு பக்கத்து தெருவில் மின்சார வாரிய வேலை என்று அறிவித்தார்.
"அய்யோஅவர்களை வேறு வரச்சொல்லிவிட்டோம்என்ன செய்வது?சமாளிக்கலாமா வள்ளி?"
"சமாளிக்கிறதாவது?!.. வியர்த்து வரும்நொசநொசத்துப் போகும்இப்போதே பாதி இருள்அவள் புடவை எடுக்காதுவேண்டாங்க."
"ஹ்ம்ம்.. அப்படியானால்என்ன செய்யலாம்?"
"வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்இன்னொரு நாள் பார்க்கலாம்"என்றாள் வள்ளி.
"ஆமா அத்தான்எனக்கென்னமோ இது நல்ல சகுனமாகப் படவில்லை.எதற்கும் அந்தப் பையனைப் பற்றிக் கொஞ்சம் விசாரிப்போமேஅப்படியே நம்ம தரகர் ஒரு பையனைப் பற்றிச் சொன்னார்அதையும் பார்க்கலாம்என்றார் மாமா.மாலதிக்குவயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது
Category: 0 comments

0 comments:

Post a Comment